திருச்சிற்றம்பலம் பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருச்சிற்றம்பலம் பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-08-11 19:47 GMT

திருச்சிற்றம்பலம்:

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திருச்சிற்றம்பலம் அருகே பாலத்தளி கிராமத்தில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோவிலில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் அபிஷேகம் நடந்தது. பக்தர்களின் வசதிக்காக பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதியில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவில் வளாகத்தில் அன்னதான விழாவும் நடந்தது.

இதேபோல் செருவாவிடுதி வன சூழலியல் பண்ணை காப்பு காட்டில் அமைந்துள்ள போத்தி அம்மனுக்கு வன தேவதை சிறப்பு அலங்காரத்துடன் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. உப்புவிடுதி அக்னி காளியம்மன் கோவில், ஆதிபராசக்தி கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடும், இடையாத்தி மந்திக்கோன் விடுதி கிராமத்தில் அமைந்துள்ள சிவதுர்க்கை அம்மன் கோவிலில் நேற்று மாலை திருவிளக்கு பூஜையும் நடந்தது. சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்