அகத்தியர் சிவசித்தர் பீடத்தில் சிறப்பு வழிபாடு

அகத்தியர் சிவசித்தர் பீடத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2023-04-20 19:23 GMT

பொன்னமராவதி அருகே வெள்ளையாண்டிப்பட்டி சிவபுரத்தில் அகத்தியர் சிவசித்தர் பீடத்தில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு பகவதி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்