முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு-தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு-தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

Update: 2022-06-02 18:28 GMT

திருப்புவனம்

திருப்புவனத்தில் ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் செயற்குழு கூட்டம் தனியார் திருமண மகாலில் ஒன்றிய அவைத்தலைவர்கள் சுப்பிரமணியன், சக்திமுருகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்கள் கடம்பசாமி, வசந்திசேங்கைமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம், ஈஸ்வரன், யூனியன் துணைச் சேர்மன் மூர்த்தி, பேரூராட்சி துணைத் தலைவர் ரகமத்துல்லாகான், ஒன்றிய நிர்வாகிகள் ரவி, சுப்பையா, வெங்கடேசன், சேகர், பாண்டியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் தேவதாஸ், அறிவுக்கரசு, நகர் கழக நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஜூன் 3-ல் கருணாநிதி பிறந்த நாளில் ஒன்றிய, நகர தி.மு.க. சார்பிலும், கிளை கழகங்களிலும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்றும், ஜூன் 5-ல் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் மாட்டுவண்டி பந்தயங்களை சிறப்பாக நடத்தவும், ஜூன் 8-ல் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நடைபெறும் வரவேற்பில் திரளாக கலந்து கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளரும், திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி தலைவருமான சேங்கைமாறன் தீர்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்