முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு கந்திலி ஒன்றிய தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கந்திலி ஒன்றிய தி.மு.க.கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பத்தூர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கந்திலி ஒன்றிய தி.மு.க.கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கந்திலி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ்.அன்பழகன், கு.ராஜமாணிக்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட துணை செயலாளர் எஸ்.சம்பத்குமார் முன்னிலை வகித்தார். ஆர்.தசரதன், முருகேசன் ஆகியோர் வரவேற்றனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஏ. நல்லதம்பி எம்எல்ஏ பேசியதாவது; திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 10 ஆயிரம் பேர் கொடிகளுடன் தி.மு.க.அரசின் சாதனைகள் குறித்த பதாகைகள் கையில் ஏந்தியவாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
10 இடங்களில் அமைக்கப்பட்ட மேடைகளில் தி.மு.க. சாதனைகளை கூறி கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.் அனைவரும் அங்கு பதாகைகளை ஏந்தி நின்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சிறப்பான முறையில் வரவேற்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் திருமதி திருமுருகன், துணைத் தலைவர் மோகன்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட கவுன்சிலர் குணசேகரன், சி. கே.சுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சீனிவாசன், சதாசிவம் நன்றி கூறினர்.