திருவாடானையில் சிறப்பு கிராம சபை கூட்டம்

திருவாடானையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-30 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் இலக்கியா ராமு தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் வரும் நிதியாண்டில் நிறைவேற்றப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் தேர்வு செய்யப்பட்டு கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டது. கூட்ட பார்வையாளராக யூனியன் பதிவறை எழுத்தர் சங்கீதா கலந்து கொண்டார். ஊராட்சி செயலாளர் சித்ரா, ஊராட்சி உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்