சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

மானூர் யூனியன் மூவிருந்தாளி பஞ்சாயத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-10-14 19:58 GMT

பேட்டை:

மானூர் யூனியனுக்கு உட்பட்ட மூவிருந்தாளி ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் தலைமை தாங்கினார். மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் வரவேற்றார். மேலநீலிதநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் வெற்றி விஜயன், பஞ்சாயத்து தலைவர் வெள்ளப்பாண்டி, கால்நடை துணை இயக்குனர் கலையரசி, கால்நடை உதவி மருத்துவர் மலர்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி, சத்து மாத்திரைகள், கால்நடை வளர்ப்பு பயிற்சி, சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி வின்சென்ட், அரிச்சந்திரன், முகமது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்