பிரசவ வார்டில் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை மையம்

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-24 19:27 GMT


விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்து அபாயம்

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் மேம்பாலம் இறங்கும் இடத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. ராமமூர்த்தி ரோட்டின் தென்புறத்தில் பிரசவ ஆஸ்பத்திரியும், வடபுறத்தில் இதர சிகிச்சை பிரிவுகளும் உள்ளன.

இந்தநிலையில் பிரசவ ஆஸ்பத்திரியில் இருந்து பிறந்த குழந்தைகளை காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட பரிசோதனைகளுக்காக குழந்தை பெற்ற பெண்களின் உறவினர்கள் சாலையை கடந்து எதிரே உள்ள இதர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆஸ்பத்திரி முன்பு மேம்பாலத்தில் வேகமாக இறங்கும் வாகனங்களும், அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களும் வந்து செல்லும் நிலையில் சாலையை குழந்தைகளுடன் கடக்கும் பெண்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

தவிர்க்கப்படும் நிலை

எனவே அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் குழந்தைகளுக்கு மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளை சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவர்கள், பிரசவ ஆஸ்பத்திரி பகுதிக்கே சென்று தேவையான பரிசோதனைகளை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் குழந்தைகளுக்கும், குழந்தைகளை கொண்டு செல்லும் பெண்களுக்கும் விபத்துகளால் ஏற்படும் ஆபத்து தவிர்க்கப்படும் நிலை ஏற்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்