தீபாவளி பண்டிகை: நெல்லை, ராமேஸ்வரம், திருச்சிக்கு சிறப்பு ரெயில்

தீபாவளி பண்டிகையையொட்டி முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-10-21 05:43 GMT

சென்னை,

தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை சென்ட்ரலில் இருந்து ராமேசுவரத்துக்கும், தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி மற்றும் திருச்சிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

திருச்சியில் இருந்து நாளை (சனிக்கிழமை) மதியம் 2.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் இரவு 7 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரத்தில் இருந்து வருகிற 27-ந்தேதி இரவு 9.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 2.50 மணிக்கு திருச்சியை சென்றடையும்.

தாம்பரத்தில் இருந்து நாளை இரவு 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். திருநெல்வேலியில் இருந்து வருகிற 26-ந்தேதி மாலை 5.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 23-ந்தேதி இரவு 8.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 11 மணிக்கு ராமேசுவரம் செல்லும். ராமேசுவரத்தில் இருந்து வருகிற 24-ந்தேதி மாலை 4.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்