தூத்துக்குடி - சென்னை இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கம்

கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Update: 2024-04-20 04:57 GMT

தூத்துக்குடி,

கோடை விடுமுறையையொட்டி, பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவு மக்கள் படையெடுப்பார்கள். அவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படும்.

இந்த நிலையில், தூத்துக்குடி - சென்னை இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, இன்று மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரெயில் புறப்படுகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்