நெல்லை - சென்னை இடையே இன்றிரவு சிறப்பு ரெயில் இயக்கம்
நெல்லையில் இருந்து இரவு 10.45 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது.
நெல்லை,
கோடை விடுமுறையையொட்டி, பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவு மக்கள் படையெடுப்பார்கள். அவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படும். தெற்கு ரெயில்வே சார்பில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
அந்த வகையில், நெல்லை - சென்னை இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
நெல்லையில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயிலானது, நாளை காலை 10.15 மணிக்கு சென்னை திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு இரண்டடுக்கு, 2 மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டி மற்றும் 10 படுக்கை வசதி பெட்டிகளுடன் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.