வருகிற 13-ந் தேதி முதல் திண்டுக்கல்-கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு பொங்கல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

Update: 2023-01-12 00:17 GMT

மதுரை,

தென்னக ரெயில்வே சார்பில், பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு பொங்கல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, வருகிற 13-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை திண்டுக்கல்-கோவை இடையே இரு மார்க்கங்களிலும் ஒரு முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் கட்டண சிறப்பு பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் (வ.எண்.06077) கோவையில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்தடையும்.

மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.06078) திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில்கள் அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, பழனி, புஷ்பத்தூர், மடத்துக்குளம், மைவாடி ரோடு, உடுமலைப்பேட்டை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதில் 10 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 பார்சல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். மதுரை பயணிகளை பொறுத்தமட்டில், குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரசில் (வ.எண்.16128) மதுரையில் இருந்து 12.35 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் சென்றடையலாம். அங்கிருந்து திண்டுக்கல்-கோவை சிறப்பு ரெயிலில் கோவை வரை பயணம் செய்ய வாய்ப்புள்ளது.

ஈரோடு, திருப்பூர் வழியாக செல்லும் நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண்.16321) மதியம் 12 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.20 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் சென்று விடலாம். அங்கிருந்து சிறப்பு ரெயிலில் மாறிச்சென்றால் மாலை 5.30 மணிக்கே கோவை சென்றடையலாம். அதிவிரைவாக கோவை செல்ல விரும்பும் பயணிகள் இந்த ரெயிலில் பயணம் செய்யலாம். நாகர்கோவில் ரெயில் இரவு 7 மணிக்கு கோவை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்