தேவாலய திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில்

தேவாலய திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

Update: 2023-08-01 18:42 GMT

கோப்புப்படம்

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாங்கண்ணி தேவாலய திருவிழாவை முன்னிட்டு, செப்டம்பர் 5-ந்தேதி இரவு 10.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரெயில் (வண்டி எண்.06031) புறப்படும். இந்த ரெயில் வேளாங்கண்ணியை அடுத்தநாள் காலை 5.45 மணிக்கு சென்றடையும். இதேபோல, மறுமார்க்கமாக செப்டம்பர் 6-ந்தேதி காலை 8.50 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு சிறப்பு ரெயில் (06032) அதே நாள் மாலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்