பெங்களூரு-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில்சேவை நீட்டிப்பு
பெங்களூரு-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்படுகிறது.
பெங்களூரு-வேளாங்கண்ணி இடையே திருச்சி வழியாக இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் மேலும் ஒரு மாதம் (ஜூன்) நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி சனிக்கிழமை தோறும் இயக்கப்பட்டு வரும் பெங்களூரு-வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் (வண்டி எண்:06547) மற்றும் வேளாங்கண்ணி- பெங்களூரு சிறப்பு ரெயில் (வண்டி எண்:06548) வருகிற 10-ந்தேதி, 17-ந்தேதி, 24-ந்தேதி மற்றும் அடுத்த மாதம்(ஜூலை) 1-ந்தேதி, 8-ந்தேதி ஆகிய நாட்களில் கூடுதலாக இயக்கப்படும். இந்த சிறப்பு ரெயில் புறப்படும், சேரும் நேரம், நிறுத்தங்கள் மற்றும் பெட்டிகளின் எண்ணிக்கை ஆகியவற்றில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.