சிறப்பு வரிவசூல் மேளா
வாணியம்பாடி நகராட்சி சார்பில் சிறப்பு வரிவசூல் மேளா நடந்தது.
வாணியம்பாடி
வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் மாரிசெல்வி தலைமையில், மேலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் அலுவலக பணியாளர் கொண்ட குழுவினர் தினசரி வார்டு வார்டாக சென்று தீவிர வரி வசூல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில்வரி கட்டணங்களை வசூல் செய்ய நகராட்சி சார்பில் சிறப்பு வரி வசூல் மேளா பஸ் நிலையம் மற்றும் அம்பூர்பேட்டை, பூக்கடைபஜார் பகுதியில் நேற்று நடந்தது.
இதில் நகராட்சி ஆணையாளர் தலைமையில் அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள் கலந்துக் கொண்டு சிறப்பு வரி வசூலில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள் சிலர் தாமாக முன் வந்து நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி கட்டணத்தை செலுத்தினர்.
இந்த சிறப்பு வரி வசூல் மேளா நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மார்ச் மாதம் வரையில் நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.