லஞ்சம் வாங்கிய உணவு கடத்தல் பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, லஞ்சம் வாங்கிய உணவு கடத்தல் பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது ெசய்தனர்.

Update: 2023-06-10 18:51 GMT

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, லஞ்சம் வாங்கிய உணவு கடத்தல் பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது ெசய்தனர்.

வாகன சோதனை

விருதுநகர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் முருகசெல்வம் (வயது 50). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள அரிசி ஆலைகளில் ஆய்வு செய்வதாகவும், அப்போது ஆலை உரிமையாளர்களிடம் லஞ்சம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டது. இவர் லஞ்ச பணத்துடன் காரில் விருதுநகர் நோக்கி வருவதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர்- அழகாபுரி சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு சிறப்பு ஆய்வாளர் சிவக்குமார் முன்னிலையில், லஞ்ச ஒழிப்பு கூடுதல் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், சல்பான்துரை ஆகியோர் அந்த வழியாக வரும் வாகனங்களை மறித்து சோதனை நடத்தினர்.

பணம் பறிமுதல்

அப்போது அந்த வழியாக காரில் வந்த முருகசெல்வத்தை மடக்கி விசாரணை நடத்தினர். மேலும் காரில் சோதனை நடத்தியபோது அதில் ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் இருந்தது. இந்த பணத்திற்கு உரிய கணக்கு இல்லாத நிலையில் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர் அந்த பணத்தை அரிசி ஆலை உரிமையாளர்களிடம் பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், முருகசெல்வத்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முருகசெல்வத்துக்கு சொந்த ஊர் நாகர்கோவில். இவர் மதுரை மாவட்டத்திலும் பணியாற்றி உள்ளார்.

உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரிகள் நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளில் சோதனை நடத்தினர். அப்போது முறைகேடுகள் ஏதும் கண்டறியப்படாத நிலையில் மறுநாளே அதாவது நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது அதிகாரிகள் இடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்