பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரிக்கு சிறப்பு அந்தஸ்து

நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ளது.

Update: 2022-12-01 19:43 GMT

நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையில் தொடர்ச்சியாக அதிகபட்ச அந்தஸ்தை பெற்று வருகிறது. மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி தொழில் முனைவோரை உருவாக்குவது, அரசின் ஸ்டார்ட் அப் நிகழ்ச்சியில் பங்கேற்பது, அறிவுசார் படைப்புகள், புதிய கண்டுபிடிப்புகள், கல்லூரியில் சிறப்பான செயல்பாடுகள் அனைத்தும் அதிகமாக நடத்தப்படும் கல்லூரிகளுக்கு நட்சத்திர அந்தஸ்தை மத்திய கல்வி அமைச்சகம் வழங்குகிறது. இக்கல்லூரி மாணவர்கள் தொழில்முனைவோர் பயிற்சி மூலமாக தொழில் மானியம் பெறக்கூடிய சந்தர்ப்பங்களும், அதன்மூலமாக புதிய தயாரிப்புகளை உருவாக்கக்கூடிய வாய்ப்பும் கிடைக்கிறது. கல்லூரியில் உள்ள 20 பயன்பாட்டு தொழிற்சாலை ஆய்வக இன்குபேஷன் மையம் செயல்பட்டு வருகிறது. அதன்மூலம் புதிய கண்டுபிடிப்புகளை தயாரித்து உருவாக்குபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. ேமலும் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் போட்டி, தேசிய அளவிலான போட்டிகளில் பரிசுகள் வென்றுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய கல்வி அமைச்சகம் இந்தியா முழுவதும் 1,823 கல்லூரிகளில் தேர்வு செய்யப்பட்ட 53 கல்லூரிகளின் பட்டியலில் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இடம் பெற்று, 3.5 அதிகபட்ச நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.

இதற்கு ஊக்கம் அளித்த பொது மேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கணினித்துறை இயக்குனர் முகம்மது சாதிக், கல்லூரி முதல்வர் வேல்முருகன், வேலைவாய்ப்பு துறை இயக்குனர் ஞானசரவணன், திறன் பயிற்சி துறை இயக்குனர் பாலாஜி, இயக்குனர் ஜான்கென்னடி, முனைவர் லூா்டஸ் பூபாலராயன், தொழில் முனைவோர் துறை ஒருங்கிணைப்பாளர் பிரேம் ஆனந்த் உள்ளிட்டவர்களை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குனர் அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்