கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு பூஜை

ஆனி திருமஞ்சன விழாவையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2022-07-05 18:43 GMT

ஆனி திருமஞ்சன விழா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடராஜர்- சிவகாமி அம்பாளுக்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர், திருநீறு, பஞ்சாமிர்தம், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நடராஜர்- சிவகாமி அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று, சுவாமிகளுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

இதில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது.

கடம்பவனேசுவரர் கோவில்

குளித்தலையில் உள்ள கடம்பவனேசுவரர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜருக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு மலர்கள் மற்றும் உத்திராட்சை மாலை போன்றவை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கோவிலை சுற்றியுள்ள 4 வீதிகளிலும் நடராஜரின் வீதியுலா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்