வன்மீகநாதர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமியையொட்டி வன்மீகநாதர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2022-11-16 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை மெயின் ரோட்டில் வன்மீகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலபைரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இந்த கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பைரவருக்கு மஞ்சள், பால், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.வேதாரண்யத்தை அடுத்த மறைஞாயநல்லூர் மேலமறைகாடர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு யாகம் நடந்தது. முன்னதாக பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்