சமுக்தியாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜை
சமுக்தியாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜை
பொள்ளாச்சி
பொள்ளாச்சியை அடுத்த அங்கலகுறிச்சி ஆத்மநாதவனத்தில் சமுக்தியாம்பிகை கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று சமுக்தியாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடத்தப்பட்டது.
இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.