கரூர் எல்.ஜி.பி. நகர் பகுதியில் உள்ள குபேர சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 5-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி விநாயகருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.