பெரியகுளம் காளகஸ்தீசுவரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா

பெரியகுளம் காளகஸ்தீசுவரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.

Update: 2023-03-29 20:45 GMT

பெரியகுளம் தென்கரையில் உள்ள ஞானாம்பிகை சமேத காளகஸ்தீசுவரர் கோவிலில் நேற்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. அப்போது சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து மதியம் 1.06 மணிக்கு கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

இதையொட்டி நேற்று காலை 12 முதல் மதியம் 2 மணி வரை பரிகார ஹோமமும், நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றது. இந்த விழாவில் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்