முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. கோத்தகிரியில் பக்தர்கள் பால்குடங்களை எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

Update: 2022-06-12 14:30 GMT

கூடலூர், 

வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. கோத்தகிரியில் பக்தர்கள் பால்குடங்களை எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

வைகாசி விசாகம்

நீலகிரி மாவட்டத்தில் வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை தொடர்ந்து அதிகாலை முதல் அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கூடலூர் பகுதியில் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கூடலூர் குசுமகிரி முருகன், சந்தனமலை, 1-வது மைல் முருகன் கோவில்களில் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கூடலூர் சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள பால முருகன் சன்னதியில் வைகாசி விசாகத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் பந்தலூர் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

பக்தர்கள் ஊர்வலம்

இதையொட்டி கோத்தகிரி டானிங்டன் மகா சக்தி விநாயகர் கோவிலில் இருந்து காலை 8 மணிக்கு மேள தாளங்களுடன் சக்திமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகளை எடுத்து ஊர்வலமாக வந்தனர். முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என பக்தி கோஷங்களை எழுப்பியவாறு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. முருகருக்கு நல்லெண்ணெய், பால், பச்சரிசி மாவு, பஞ்சாமிர்தம், திருநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, ஐந்து முக விளக்கு வைத்து, பஞ்சாமிர்தம், பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும் வைத்து அலங்கார பூஜை நடத்தப்பட்டது.

இந்த பூஜையில் பூசாரி, பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்துகொண்டு கந்த கவச பாராயணம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் கோத்தகிரி அருகே உள்ள தங்கமலை, நட்டக்கல் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகம் கொண்டாடப்பட்டது. அதேபோல் ஊட்டி எல்க்ஹில் முருகன் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்