கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

பவுர்ணமியையொட்டி டானிங்டன் கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2022-06-14 13:59 GMT

கோத்தகிரி,

கோத்தகிரி டானிங்டன் பகுதியில் பிரசித்தி பெற்ற கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி மாத பவுர்ணமி தினத்தையொட்டி நேற்று முன்தினம் மதியம் 2.30 மணிக்கு யாக பூஜை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்