கங்கா சவுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

பிரதோஷத்தையொட்டி கங்கா சவுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2022-06-26 20:00 GMT

தலைவாசல்:

தலைவாசல் அருகே வீரகனூர் சுவேத நதி ஓரத்தில் கங்கா சவுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷசத்தையொட்டி நேற்று நந்தீஸ்வரருக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், தயிர் ஆகிய பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்கள் அருகம்புல் மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்தனர். இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்