கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

Update: 2023-04-09 18:45 GMT

கடையநல்லூர்:

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட 3-ம் நாளில் உயிர்த்ெதழுந்த ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கடையநல்லூர் பண்பொழி சாலையிலுள்ள பெத்தேல் ஏ.ஜி. சபை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் கேரளாவில் இருந்து வருகை தந்த போதகர் மேத்யூ, தலைமை போதகர் ராபின்சன் ஆகியோர் தேவசெய்தி வழங்கினர். போதகர்கள் சத்தியநாதன், ஆபரகாம், சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்