காங்கிரஸ் வெற்றி பெற சிறப்பு பிரார்த்தனை
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் செய்யது மக்தூம் ஜிஹானி ஜிஹாங் கஷ்த் வலியுல்லாஹ் பெரிய பள்ளிவாசல் கந்தூரி விழா நடந்தது. அப்போது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற தலைமை செயற்குழு உறுப்பினர் மா.செல்லத்துரை சிறப்பு பிரார்த்தனை செய்தார். இதில் நகர தி.மு.க. செயலாளர் அப்பாஸ், நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், கடையநல்லூர் யூனியன் துணைச்செயலாளர் ஐவேந்திரன் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.