திருமெய்ஞான சிங்காரவேலவனுக்கு சிறப்பு பூஜை

ஆடிமாத கிருத்திகையையொட்டி திருமெய்ஞான சிங்காரவேலவனுக்கு சிறப்பு பூஜை

Update: 2023-08-09 18:45 GMT

திருக்கடையூர்:

திருக்கடையூர் அருகே திருமெய்ஞானத்தில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆம்ல குஜாம்பிகா எனும் வாடா முலையாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவில் தேவார சிறப்புமிக்க 274 திருத்தலங்களில் மூவரால் பாடப்பட்ட 44 தலங்களில் ஒன்றாகவும் உள்ளது. இக்கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து புனிதநீரை எடுத்து வந்து தினமும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் நேற்று ஆடிமாத கிருத்திகையையொட்டி சிங்காரவேலவன் சாமிக்கு பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் கணேச குருக்கள், இந்து சமய அறநிலையத்துறை செயலர் முருகேசன், ஆய்வாளர் பத்ரி நாராயணன், கோவில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்