முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
கூடலூர்,
மாதந்தோறும் கிருத்திகை நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று கிருத்திகையையொட்டி கூடலூர் குசுமகிரி முருகன் கோவிலில் அதிகாலை 5.30 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல் கூடலூர் சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள முருகப்பெருமான் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஊட்டி எல்க்ஹில் முருகன் கோவிலில் கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.