நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி விசாலாட்சி அம்மன் புன்னகேஸ்வரர் கோவிலில் ஆடிக்கிருத்தியை முன்னிட்டு வள்ளி, தெய்வானை மற்றும் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.
இரவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
இதேபோல் நெமிலியை அடுத்த புன்னை முருகன் கோவிலிலும் வள்ளி, தெய்வானை மற்றும் முருகனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
லாலாபேட்டை அருகே உள்ள காஞ்சனகிரி மலைகோயில், அக்ராவரம் அருகே உள்ள மலைகோயில் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆடி கிருத்திகை விழாவிலும் திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகனுக்கு தங்கள் நேர்த்திக் கடனை பக்தி பரவசத்துடன் உடன் செலுத்தினார்கள்.