வீரமாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

கரிவேடு வீரமாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2023-04-14 19:01 GMT

காவேரிப்பாக்கத்தை அடுத்த கரிவேடு கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் அம்மனுக்கு நெய், சந்தனம், நெய், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் பக்தர்கள் அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்றினர். இரவு அம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா வந்தது. விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்