வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

ரத சப்தமியையொட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2023-01-28 18:45 GMT

ரத சப்தமியையொட்டி புதுக்கோட்டையில் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அன்னவாகனம், சிம்ம வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், கருட சேவை, சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், சிறிய கருட சேவை, பெரிய வரதன் புறப்பாடு, ஊஞ்சல் சேவை, சிறிய ரதம் புறப்பாடு நடைபெற்றது. ஒரே நாளில் வரதராஜ பெருமாள் 10 வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்