தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டிஉலகளந்தபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2023-04-14 18:45 GMT

திருக்கோவிலூர், 

உலகளந்தபெருமாள் கோவில்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பிரசித்தி பெற்ற உலகளந்தபெருமாள் கோவிலில் தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீசபெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு பொதுப்பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாளுக்கு கருட சேவை புறப்பாடு நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் மற்றும் தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் என்கிற கிருஷ்ணன் தலைமையில் விழா குழுவினர்கள், உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள் செய்திருந்தனர்.

வீரட்டானேஸ்வரர் கோவில்

திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில், கிழக்கு தெரு ஆஞ்சநேயர் கோவில், என்.ஜி.ஜி.ஓ. நகர் ஆஞ்சநேயர் கோவில், சந்தப்பேட்டை ஆஞ்சநேயர் கோவில், ராவத்தநல்லூர் ஸ்ரீ சஞ்சீவி ராயர் ஆஞ்சநேயர் கோவில் மற்றும் சங்கராபுரம், தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்