திருவதிகைசரநாராயணபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
திருவதிகை சரநாராயணபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பண்ருட்டி,
பண்ருட்டி திருவதிகை சரநாராயணபெருமாள் கோவிலில் சித்திரை மாத அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சரநாராயணபெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் சர நாராயண பெருமாள் திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன்பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் சரநாராயண பெருமாள் உட் பிரகாரத்தில் 3 முறை வலம் வந்தார். அதன்பிறகு திரு கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.