சரநாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
பண்ருட்டி சரநாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பண்ருட்டி,
பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசையை யொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்படி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலவர் சர நாராயண பெருமாள் தன்வந்திரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மருத்துவ மூலிகை கலந்த லேகியம் பிரசாதமாக வழங்கப்பட்டது. முன்னதாக உற்சவர் பெருமாள் மாட வீதி உலா வந்து திருக்கண்ணாடி அறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.