சரநாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

பண்ருட்டி சரநாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2023-01-21 19:11 GMT

பண்ருட்டி, 

பண்ருட்டி திருவதிகையில் உள்ள சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று தை அமாவாசையை யொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மூலவர் சரநாராயண பெருமாள் மா, பலா, வாழை உள்பட பல்வேறு வகையான பழங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட பழப்பந்தலில் பிருந்தாவன கண்ணன் (வேணுகோபாலன்) அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து உற்சவர் சரநாராயண பெருமாள் திருக்கண்ணாடி அறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்