பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது

Update: 2022-10-08 18:21 GMT

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை

தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று ஸ்ரீ ஆதி ஜெகநாத பெருமாள், தர்ப்பசயணராமர், பட்டாபிஷேக ராமர், பத்மாசனித்தாயார் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளும் நடைபெற்றன.

அதுபோல் பெருமாள் சன்னதிக்கு முன்பாக கல்யாண ஜெகநாத பெருமாள் மற்றும் சந்தான கண்ணனும் அலங்காரம் செய்யப்பட்ட பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்புல்லாணி ஸ்ரீ ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் பெருமாளை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களை ஒழுங்குபடுத்தி வரிசையாக அனுப்பும் பணியில் திவான் பழனிவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் கோவிலின் பேஸ்கார் கண்ணன் தலைமையில் ஏராளமான கோவில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

சிறப்பு பூஜைகள்

இதேபோல் தேவிபட்டினம் அருகே ஸ்ரீசக்கரவாளநல்லூர் கிராமத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவி ஆகியோருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மாப்பொடி, மஞ்சள் பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதுபோல் ராமேசுவரம் தங்கச்சிமடம் அருகே உள்ள ஏகாந்த ராமர் கோவில், தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்ட ராமர் கோவில், ராமர் தீர்த்தம் பகுதியில் உள்ள ராமர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் மற்றும் ராமர் கோவில்களிலும் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்