பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

வள்ளிமலை பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2022-10-22 18:19 GMT

பொன்னையை அடுத்த வள்ளிமலை பகுதியில் உள்ள தென் வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி 5-ம் சனிக்கிழமையான நேற்று திருமஞ்சன ஹோமம், சுதர்சன ஹோமம் மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மூலவர், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தாிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்