பெரியநாயகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

திருமருகல் அருகே பெரியநாயகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

Update: 2023-06-21 10:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் பெரியநாயகி அம்மன், பெத்தார்ண சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பெரியநாயகி அம்மன், பெத்தார்ண சாமிக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோதண்டராஜபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்