மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ஆடி கடைசி வெள்ளியையொட்டி மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
ஆனைமலை
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோவிலில் குவிந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலையில் முதல் கால பூஜை நடந்தது. தொடர்ந்து உச்சிபூஜை, சாயரட்ச பூஜை, தங்கமலர் அர்ச்சனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் ஆனைமலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மதுரை, தேனி, கம்பம், திண்டுக்கல், பழனி, திருப்பூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் ஆனைமலைக்கு இயக்கப்பட்டன.