மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

நத்தம் இந்து வர்த்தகர்கள் சங்கம் சார்பில் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூைஜ நடந்தது.

Update: 2023-04-15 14:22 GMT

நத்தம் இந்து வர்த்தகர்கள் பொதுநலச்சங்கம் சார்பில், தமிழ் புத்தாண்டு மற்றும் சங்கத்தின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் வாசுதேவன், பொருளாளர் நகுலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி நத்தம் காந்தி கலையரங்கில் இன்னிசை நாதஸ்வர கச்சேரி நடைபெற்றது. மேளதாளம் முழங்க மாரியம்மன் கோவிலுக்கு சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஊர்வலமாக சென்று மாரியம்மனுக்கு விசேஷ பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து பேரூராட்சி கவுன்சிலர்கள், சங்க நிர்வாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ, நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, தொழிலதிபர் அமர்நாத், வர்த்தகர் சங்க தலைவர் சேக் ஒலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை இந்து வர்த்தகர்கள் பொதுநலச்சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்