மகா மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
மகா மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
மண்மங்கலம் பண்டுதகாரன் புதூரில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனிதநீர் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.பின்னர் மகா மாரியம்மனுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.