லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2022-10-15 17:31 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு பக்தோசிதப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரனை நடைபெற்றது. சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கோவில் பிரகாரத்தில் 108 முறை சுற்றி வந்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்