கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
பவுர்ணமியையொட்டி கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
கோத்தகிரி
கோத்தகிரி டானிங்டன் பகுதியில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு யாக பூஜை மற்றும் அபிஷேக, அலங்கார பூஜை நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு முழுமதி ஸ்ரீ கருமாரியம்மன் மகளிர் வழிபாட்டு மன்றம் சார்பில், சிறப்பு யாக பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல் கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவில், பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.