கோத்தகிரியில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

கோத்தகிரியில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

Update: 2022-10-07 18:45 GMT

கோத்தகிரி

புரட்டாசி மாத வெள்ளிக் கிழமையையொட்டி கோத்தகிரியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல கடைவீதி பண்ணாரி மாரியம்மன் கோவில் மற்றும் டானிங்டன் கருமாரியம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையான இன்று (சனிக்கிழமை) சோலூர்மட்டம் அருகே வனப்பகுதியில், ரங்கசாமி மலையில் உள்ள ரங்கநாதர் கோவிலில் பழங்குடியின மக்களால் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்த பூஜையில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்