பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் சிறப்பு பூஜை
விழுப்புரம் பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
விழுப்புரம் மருத்துவமனை வீதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் ஆடிக்கிருத்திகை விழா நடைபெற்றது. விழாவையொட்டி வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. இதில் விழுப்புரம் நகரத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.