ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2023-09-23 19:00 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி கும்ப ஜெபம், கும்ப பூஜை, சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் வெள்ளி காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் மீனா பட்டாச்சாரியா, அறங்காவலர்கள் ராதாகிருஷ்ணன், சுப்பிரமணியன், சிவக்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்