திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில்ராகு-கேது தோஷ நிவர்த்தி பூஜை
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது தோஷ நிவர்த்தி பூஜை நடந்தது.
குடவாசல் அருகே திருப்பாம்புரத்தில் சேஷபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ராகு-கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. தேவார பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்றாகும். ராகு -கேது தோஷ நிவர்த்தி தலமான இங்கு தினசரி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். இந்த நிலையில் கோவிலில் நேற்று ராகு-கேது தோஷ நிவர்த்தி பூஜை நடந்தது. அப்போது ராகுதோஷம், கேது தோஷம், நாக தோஷம், திருமண தடை உள்ள பக்தர்கள் பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை வழங்கி வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் வள்ளிகந்தன் செய்திருந்தார்.