சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி விழா
சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.
வலங்கைமான் தையல்நாயகி சமேத வைத்தீஸ்வரன் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது. அப்போது காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதேபோல் வலங்கைமான் அருணாச்சலேஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில், காசி விசுவநாதர் கோவில், விருப்பாச்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர் கோவில், நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், சந்திரசேகரபுரம் சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.