திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பரிகார பூஜை
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பரிகார பூஜை நடந்தது.
குடவாசல் அருகே திருப்பாம்புரத்தில் சேஷபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ராகு-கேது பரிகார தலமான இங்கு ராகுவும், கேதுவும் ஒரே ரூபமாக அருள்பாலித்து வருகிறார்கள். இங்கு ராகு, கேது தோஷம், நாக தோஷம், திருமண தடை உள்ளிட்டவற்றுக்கு பரிகார பூஜை நடந்தது. கவுரி சங்கர் சிவாச்சாரியார் சிறப்பு பூஜைகளை நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், மேலாளர் வள்ளிகந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.