மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு முகாம்
மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையம் மற்றும் சிறப்பு போலீஸ் பிரிவினர் கலந்து கொண்டனர். முகாமில் 31 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.